weather

img

கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு!

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும்,நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களான கோவை, நீலகிரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும்,நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.